பெண்கள் உலகம்
குழந்தைக்கு கை கழுவ சொல்லி தரும் தந்தை

குழந்தைகளிடம் கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தை போக்குவது எப்படி?

Published On 2020-03-27 12:34 IST   |   Update On 2020-03-27 12:34:00 IST
உதாசினம் செய்யாமல் குழந்தைகளுக்கு கொரோனா என்றால் என்ன என்பதை விளக்குங்கள். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சுற்றிலும் என்ன நடக்கிறது, ஏன் யாரும் வெளியே செல்லக்கூடாது என்று சொல்கிறார்கள் என குழப்பத்திலும், ஒருபக்கம் உங்கள் பேச்சுகள் மறும் உங்களுடைய பதட்டத்தைக் கண்டு என்னவென்றே தெரியாத குழந்தைகளும் பீதியில் இருப்பார்கள். ஆனால் இந்த பயம்தான் மிகப்பெரிய கொடிய நோய் என்பதை மறவாதீர்கள்.

எனவே சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். கேட்டாலும் உதாசினம் செய்யாமல் அவர்களுக்கு கொரோனா என்றால் என்ன என்பதை விளக்குங்கள்.

அதற்கு முதலில் உங்களுக்குத் தெளிவான புரிதல் அவசியம். நீங்கள் COVID-19 என்றால் என்ன..அது எந்த மாதிரி பரவுகிறது , எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பன போன்ற விஷயங்களை முதலில் நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகே உங்கள் பிள்ளை புரிந்துகொள்ளும்படி எடுத்துரைக்க வேண்டும். உங்கள் பிள்ளை எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனதில் இருக்கும் பயம் நீங்கும்.

அதேபோல் தற்போது கொரோனா குறித்த வதந்திகளும் பரவி வருவதால் அதை படித்துவிட்டு பயமுறுத்தும் அளவிற்கும் குழந்தைகளிடம் பேசாதீர்கள்.

அடுத்ததாக சுகாதாரமாக இருத்தல், அடிக்கடி கைக்கழுவுதல், தனிமைப்படுத்திக்கொள்ளுதல், முகம், வாய், மூக்கைத் தொடாமல் இருத்தல் போன்றவற்றின் அவசியத்தையும் பேசுவது அவசியம்.

Similar News