லைஃப்ஸ்டைல்
குழந்தைகள் பெட்வெட்டிங்

குழந்தைகள் பெட்வெட்டிங் செய்ய காரணங்களும் தீர்வும்

Published On 2020-03-21 06:14 GMT   |   Update On 2020-03-21 06:14 GMT
படுக்கையை நனைத்தல் என்பது ‘பெட் வெட்டிங்’ எனச் சொல்கின்றனர். குழந்தைகள் பெட்வெட்டிங் செய்ய காரணங்களையும், தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் பொதுவாகவே படுக்கையை நனைக்கும் பழக்கத்தில் இருப்பர். வளர வளர இந்தப் பிரச்சனை சரியாகிவிடும். படுக்கையை நனைக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களா, இது அவர்களின் பழக்கமா, குறைபாடா, உடல் பிரச்சனையா எனப் பல பெற்றோரும் பயப்படுகின்றனர். அதற்கான புரிதலை, தெளிவை (How to stop bedwetting) இந்தப் பதிவின் மூலம் பார்க்கலாம்.

குழந்தையின் வளர்ச்சிக் குறைபாடே படுக்கையை நனைப்பதற்கு முக்கிய காரணமாகும். பல குடும்பங்களில் இந்த பிரச்னை தொடர்ந்து. தன் சந்ததிகளுக்கு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

பெண் குழந்தைகள் 6 வயதுக்குள்ளாகவே, படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆண் குழந்தைகள் 7 வயதுக்குள்ளாகவே, படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தி விடுகின்றனர். அதாவது இந்த பெட் வெட்டிங் பிரச்னையிலிருந்து மீண்டு வருகின்றனர்.

பெட் வெட்டிங் செய்யும் குழந்தைகளை எப்படி அணுகுவது?

அடிப்பது, திட்டுவது, கேலி செய்வது, கோபப்படுவது, மற்றவரிடம் சொல்லி குழந்தையை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளுவது, குழந்தையை மிரட்டுவது, சண்டை போடுவது போன்றவற்றை பெற்றோரோ வீட்டு பெரியவர்களோ செய்தால் குழந்தைக்கு உடல் அல்லது மன ரீதியான பிரச்னைகள் வரலாம்.

பெட் வெட்டிங்குக்கும் உடல்நல பிரச்னைக்கும் தொடர்பு உண்டு…

வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகமாக படுக்கையை நனைப்பார்கள்.
மனநல வளர்ச்சியில் குறைபாடு உள்ள குழந்தைகள்.
மாற்று திறனாளி குழந்தைகள்
நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ள குழந்தைகள்
வலிப்பு பிரச்னை உள்ள குழந்தைகள்

கெஃபைன் ன் உணவுகளை அதிகமாக உண்ணும் குழந்தைகள் அல்லது பெற்றோர் கெஃபைன் உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கலாம்.

Tags:    

Similar News