லைஃப்ஸ்டைல்
குழந்தைகள் பள்ளியில் கற்கவேண்டிய வாழ்வியல் பாடம்

குழந்தைகள் பள்ளியில் கற்கவேண்டிய வாழ்வியல் பாடம்

Published On 2020-03-11 06:33 GMT   |   Update On 2020-03-11 06:33 GMT
பள்ளிக்குச் செல்லாமல் ஹோம் ஸ்கூல், தொலை தூரக்கல்வியில் பயிலும் குழந்தைகள் கூட அதிக மார்க் எடுத்து சாதிக்கிறார்கள். அப்படியென்றால் பள்ளி கல்லூரியில் நம் குழந்தைகளை எதை செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
நம் குழந்தைகள் பள்ளியில் பயிலும் போது நாம் பெரும்பாலும் எதைக் கண்காணிக்கிறோம்? அந்த குழந்தை முதல் மதிப்பெண் வாங்குகிறதா என்பதைத் தான். ஆனால் பள்ளிக்குச் செல்வது அதற்கு மட்டும் இல்லை. பள்ளிக்குச் செல்லாமல் ஹோம் ஸ்கூல், தொலை தூரக்கல்வியில் பயிலும் குழந்தைகள் கூட அதிக மார்க் எடுத்து சாதிக்கிறார்கள். அப்படியென்றால் பள்ளி கல்லூரியில் நம் குழந்தைகளை எதை செய்ய ஊக்குவிக்க வேண்டும்?

பெற்றோர்கள் கட்டாயம் தங்கள் குழந்தைகள் வாழ் வியல் பாடம் கற்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். அதற்கான சூழ்நிலையும் வாய்ப்பும் பள்ளி யில் இருக்கிறதா, நம் குழந்தை அந்த வாய்ப்பை பயன்படுத்த முற்படுகிறதா என்று கண்டறிய வேண்டும். உதாரணத்திற்கு வகுப்பில் செமினார் வரும் போது தங்கள் குழந்தை நான்கு பேர் கொண்ட குழுவில் விவரம் சேமிப்பவராக மட்டுமின்றி மேடையேறி பேசச் சொல்லலாம். சிறு வயதில் நண்பர்கள் முன் சொதப்பிய வர்கள் தான் பிற்காலத்தில் பெரிய பேச்சாளர்கள் ஆனவர்கள். சிறு வயது முதலே இந்த மாதிரி பொறுப்பு எடுத்து பழகுகிற குழந்தை வளர்ந்த பிறகு எந்த செயலையும் எந்தவித தயக்கமுமின்றி திடமாக செய்யும்.

படித்துப் பெறும் பட்டம் “பாஸ்போர்ட்” என்றால், அச்சமின்மை தான் “விசா” வாழ்க்கை பயணத்திற்கு. அது தான் நம்மைவெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.
அடுத்து எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண் டும் என்று நினைப்பது சாத்தியமில்லை. இந்த கதை அதற்கு சிறந்த உதாரணம். சிவனும் பார்வதியும் வாகனமான நந்தியின் மீதேறி சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வழி சென்றவர்கள் இங்கே பார், பாவம் நந்தி.

இருவரும் இப்படி ஏறிச் செல்கிறார்களே என்று கூறினர். சங்கடமடைந்த சிவன் இறங்கி நடந்துவர, அங்கே சென்றவர்கள் இங்கே பாருங்கள் கணவனை நடக்க விட்டு மனைவி வாக னத்தில் வருகிறார் என்று பேசிக் கொண்டு சென்றனர். அதை கேட்டு பார்வதி கீழே இறங்கி விட்டு சிவபெருமானை நந்தி யின் மீது அமரச் செய்து நடந்து வந்தார். அதை கண்ட சிலர் இங்கே பாருங்கள் பாவம் பெண்ணை இப்படி கஷ்டப்படுத்திகிறார் என்றனர். விழி பிதுங்கிய சிவன் கீழே இறங்கி விட்டார். இப்போது என்ன சொன்னார்கள் தெரியுமா? நந்தியை ப்ரீயாக விட்டுவிட்டு இவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றனர்.

இந்த கதையை அனேகம் பேர் சிறு வயதில் கேட்டி ருப்பீர்கள். இதிலுள்ள செய்தி என்னவென்றால் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு கிண்டல், நையாண்டி கருத்து சொல்ல நூறு பேர் கிளம்புவார்கள். அதற்கெல்லாம் செவி சாய்த்தால் ஒரு அடி கூட நகர முடியாது என் பது தான். எனவே எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்க முயற்சிக்காதீர்கள், அது தேவை இல்லை.

தப்பு செய்யக்கூடாது, பிறருக்கு தீங்கு செய்யக் கூடாது அவ்வளவுதான். நமக்கு எது சரியோ அதை தைரியமாக செய்ய வேண்டியது தான். மடியில் கணம் இருந்தால் தானே வழியில் பயம்?

மொழி தடையாக இருக்கிறதா?

உங்களுக்கு ஒன்று சொல்லவா? உலகில் 195 நாடுகள் உள்ளன. அதில் 50&70 நாடுகளில்தான் ஆங்கிலம் உபயோகிக்கிறார்கள். அதனால் ஆங்கிலம் தெரியவில்லை என்றால் அதற்காக தாழ்வு மனப் பான்மையை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை. ஆங்கில புலமை நல்ல வேலையையும் பதவியையும் பெற்று தரும் என்பதை மறுக்க இயலாது தான். ஆனால் அதைக்கண்டு அஞ்சி என்ன பயன்? அதை “கான்கர்” செய்யுங்கள். மிக எளிதில் கைவசப்படுத்தக் கூடிய மொழி ஆங்கிலம். எது ஒன்று உங்களை அச்சுறுத்துகிறதோ அதோடு “நீயா? நானா--?” என்று போராடுங்கள். அந்த அச்சத்தை வெல்லும் வரை ஓயாதீர்கள்.வெற்றி நிச்சயம்.

உங்களின் தனித்தன்மையை வளர்க்க அச்சமா?

எல்லோரும் ஆட்டு மந்தையைப் போல் ஒரு திசையில் செல்கிறார்கள். உங்களுக்கு வேறு பல வழிகள் புலப்படுகிறது. ஆனால் உங்கள் தனித்துவத்தை சோதிக்க பயம் தோன்றுகிறதா? ஏனென்றால் புதுமையாக ஏதாவது நாம் செய்யும் போது அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கோ யாரை அணுக வேண்டும் என்பதற்கோ எந்த புளூபிரிண்டும் இருக்காது. நாமாகவே போராடி கண்டறிந்து செய்து பார்த்து வெற்றி பெற்றாலும் பெறலாம், இல்லையெனில் தோல்வியில் உள்ள பாடத்தை கற்கலாம். ஆனால் புதுமையாக ஏதேனும் செய்து பார்க்க தைரியமில்லை என்றால் எல்லோரையும் போல் சாதாரண வாழ்க்கையைத் தான் வாழ முடியும்.

கனவு காணுங்கள்

நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை உங்கள் மனத்திரையில் கொண்டு வந்து அசை போடுங்கள். அவ்வாறு செய்யச் செய்ய உங்களை நீங் களே அதிகம் நம்ப ஆரம்பிப்பீர்கள்.

நிறைய படியுங்கள்

புத்தகங்களை விட சிறந்த நண்பர்கள் யாருமில்லை. பல விஷயங்களை ஒரு தொலைநோக்கு பார்வையுடன் பார்க்க நல்ல புத்தகங்கள் உறுதுணையாக இருக்கின்றன. “இயற்கையாகவே எனக்கு கூச்ச சுபாவம். என்னை போய் இதைச் செய் அதைச் செய்னா எப்படி..” என்று அங்கலாய்பவரா நீங்கள்? நீங்கள் ஒன்றும் தனி ஆள் இல்லை. உங்களைப் போலவே ஒரு பெரிய கூட்டம் உங்கள் பின்னால் இருக்கிறது. கவலை வேண்டாம். சில துணிச்சலான நண்பர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களை வெகுவாக ஊக்குவிப்பார்கள்.

இப்படியாக நம் மனதிலும் நம்மை சுற்றிலும் அச்சத்தை தவிர்த்து ஊக்கத்தை அளிக்கும் காரணிகளை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் நம்மை பாதிக்காது. வீறு கொண்டு வெற்றிநடை போடலாம். எனவே அச்சம் எனும் முட்டுக்கட்டையை களைந்து வாழ்க்கையில் முன்னேற முற்படுவோம்.

தொடர்புக்கு: director@kveg.in

Tags:    

Similar News