லைஃப்ஸ்டைல்
சிறுவர்களின் மனசோர்வும் அதன் அறிகுறிகளும்

சிறுவர்களின் மனசோர்வும் அதன் அறிகுறிகளும்

Published On 2020-02-05 03:04 GMT   |   Update On 2020-02-05 03:04 GMT
உங்கள் குழந்தையின் அன்றாட செயல்களை பெரிதும் பாதித்தாலோ உங்கள் குடும்ப மருத்துவரையோ, குழந்தைகள் மருத்துவரையோ அல்லது அவர்கள் பள்ளி பரிந்துரைக்கும் மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ சந்தித்து தீர்வுகாணலாம்.
இந்திய பள்ளி மாணவர்களிடையே மனசோர்வு வெகு விரைவாக அதிகரித்து வருகிறது.இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் வளரிளம் பருவத்தை சேர்ந்தவர். அவர்கள் உடல் ஆரோகியத்திற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒப்பிட்டு பார்த்தல்அவர்கள் மன ஆரோக்கியத்திற்கு எடுக்கப்படும் முயற்சிகள் மிக மிக குறைவு. இந்த மனசோர்வை அடையாளம் காண்பதே சிகிச்சைக்கான முதல் மற்றும் உறுதியான செயலாகும். இந்த மனசோர்வின் அறிகுறிகள் என்னென்ன?

மனநிலையில் அடிக்கடி மாற்றம், போதுமான உணவு மற்றும் தூக்கம் இல்லாமை, தனிமை, படிப்பில் கவனக்குறைவு, விளையாட்டு பயிற்சிகளிலிருந்து விலகிக்கொள்வது, வழக்கமான பணிகளை செய்வதில் சிரமம், கவனக்குறைவு, மங்கிய ஞாபக திறன் முதலியவை சில அறிகுறிகள் ஆகும்.

பருவம் அடையும் காலம் தொட்டு மாணவர்கள் பல பரிமாண மனஉளைச்சல்களுக்கு ஆளாகிறார்கள். இன்னும் ஆழமாக பார்த்தோமானால், அடிக்கடி உணர்ச்சிவசப்படுவதும், சூழ்நிலைகளை தவிர்க்க முயற்சி செய்வதும், சுற்றுப்புறத்திலிருந்து தொடர்பு வெட்டப்பட்ட நிலையும் மனசோர்வின் அறிகுறிகளாகும்

பொதுவாக மனசோர்வு இரண்டு வகைப்படும். ஒன்று உணர்ச்சிவசப்படுவது. மற்றது செயல்பாடுகளில் மாறுபடுவது. உணர்ச்சிவசப்படுவது என்றால் பொதுவாக அமைதியாக இருக்கும் சிறுவனோ அல்லது சிறுமியோ வெகுவாக கோபப்படுவது, சின்னச்சின்ன விஷயங்களுக்கு எரிச்சல் அடைவது, தேவையில்லாமல் அழுவது, பயப்படுவது போன்ற உணர்வுநிலையில் அதிகமாக காணப்படுவார்கள். இந்த மனநிலையில் இருப்பதால் சத்தமாக கத்துவது, தங்கை தம்பியை அடிப்பது, பிடிவாதம் பிடிப்பது, பொதுவாக விரும்பி செய்யும் வேலைகளை கூட செய்யாமல் இருப்பது நண்பர்களுடன் அடிக்கடி சண்டை போடுவது, கூப்பிட்டால் பதில் கூறாமல் இருப்பது, பள்ளி நேரத்தில் அடிக்கடி தலைவலி அல்லது வயிற்றுவலி என பள்ளி மருத்துவர் முன் நிற்பது போன்ற நடவடிக்கைகளை வெளிப்படுத்துவார்கள்.

மேற்சொன்ன மனசோர்வின் அறிகுறிகள் பொதுவாக குழந்தைகளிடம் அவ்வப்போது காணப்படுவது இயல்பே. ஆனால் இவ்வறிகுறிகள் தொடர்ந்து மூன்று மாதத்திற்கு மேல் இருந்தாலோ உங்கள் குழந்தையின் அன்றாட செயல்களை பெரிதும் பாதித்தாலோ உங்கள் குடும்ப மருத்துவரையோ, குழந்தைகள் மருத்துவரையோ அல்லது அவர்கள் பள்ளி பரிந்துரைக்கும் மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ சந்தித்து தீர்வுகாணலாம்.
Tags:    

Similar News