லைஃப்ஸ்டைல்
ஒன்பது முதல் பத்து வயதிலுள்ள குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

ஒன்பது முதல் பத்து வயதிலுள்ள குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

Published On 2019-11-30 03:04 GMT   |   Update On 2019-11-30 03:04 GMT
சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஒன்பது முதல் பத்து வயதிலுள்ள குழந்தைகளுக்கு ஏரோபிக் எனும் பயிற்சி மூலம் கற்கும் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஒன்பது முதல் பத்து வயதிலுள்ள குழந்தைகளுக்கு ஏரோபிக் எனும் பயிற்சி மூலம் கற்கும் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது அமெரிக்காவிலுள்ள இலினொய் பல்கலைக்கழகம் மூலம் ஒன்பது முதல் பத்து வயதிலுள்ள குழந்தைகளிடம் நடத்தப்பட்டது. அவர்களிடம் ஒரு கற்பனையான வரைபடத்திலுள்ள பெயர்களையும் இடங்களையும் நினைவில் கொள்ளுமாறு கூறினர். அதனை நினைவுகூர்ந்து கூறுகையில், உடற்பயிற்சி செய்து நல்ல ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளின் நினைவாற்றல் மற்ற சாதாரண குழந்தைகளை விடவும் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

குழந்தைகள் படிக்கும் விதத்தை ஆய்வு செய்கையில், ஆரோக்கியமான குழந்தைகளுக்கும் சாதாரண குழந்தைகளுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதாக தெரியவந்தது. இந்த ஆய்வின் மூலம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி கற்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்க, ஏரோபிக் பயிற்சிகள் நல்ல பலன் அளிக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

ஆரோக்கியமான குழந்தை வளர்ப்புக்கு மேலும் சில ஆலோசனைகளை தருகிறார்கள் ஆய்வாளர்கள். பிறந்த குழந்தைகள், முதல் இரண்டு வாரத்தில் தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன் வெளிவுலகுக்கு ஏற்றவாறு நான்கு முக்கிய திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும். பாலை உறிஞ்சி குடித்தல், வெளி உலக சீதோஷ்ண நிலைக்கு பொருந்தி போதல், சுவாசிக்க கற்று கொள்ளுதல், மலம், சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றக் கற்று கொள்ளுதல் ஆகியவை அந்த திறன்கள் ஆகும்.

இவற்றில் எதுவொன்றில் திறன் குறைந்தாலும் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இந்த காலகட்டத்தில் கூடுமானவரை மருத்துவமனை அருகில் இருக்கிற இடங்களில் தங்கியிருப்பது நல்லது. இரண்டு வாரம் முதல் இரண்டு வயது வரை உள்ள காலமானது குழந்தைகளின் வளர்ச்சி காலம். இந்த சமயத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை எளிதாக குழந்தைகளுக்கு ஒட்டிக் கொள்ளும். அடிக்கடியும் இவை குழந்தைகளை தாக்கலாம்.

சீதோஷ்ண நிலை, பயணம், தூசி, அசுத்தங்கள், அழுக்குத் துணிகள், சுத்தமற்ற தண்ணீர், குடிக்கும் பால், ஜன்னல் கதவுகளின் மூலம் வீட்டின் உள்ளே நுழையும் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் போன்றவைகளே இந்த வயதில் குழந்தைகளுக்கு நோய்களை உண்டாக்கும் காரணிகள். முடிந்தவரை இவைகளில் கவனம் செலுத்தி நோய் தாக்காதவாறு குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். அதே வேளையில் என்னதான் பாதுக்காப்பாக இருந்தாலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு சளி பிடிப்பது சாதாரணம். அவ்வப்போது காய்ச்சல் வருவதும் அதுபோன்றது தான்.

அதுபற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால் மருத்துவரிடம் சென்று குழந்தைகளை காண்பித்து வருவது நல்லது. அதே வேளையில் எப்போதும் ஐந்தாறு மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுத்துக் கொண்டிருப்பது நல்லதல்ல. ஏனென்றால் பின் விளைவுகள் இல்லாத மருந்து என்று எதுவுமே இல்லை என்பதை எல்லா மருந்தியல் நூல்களும், ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சத்து மருந்துகள் கூட சில பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால் சத்து மருந்துகளை விடுத்து சத்துணவை அளிப்பதே நல்லது.
Tags:    

Similar News