குழந்தைகளுக்கு detox diet கொடுப்பது சரியான முறை அல்ல. இது குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்பதை பெற்றோர் உணர வேண்டும்..
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கு அன்றாட காலை மற்றும் மதிய உணவுகளில் தினமும் ஏதேனும் ஒருவகைப் பொரியலும், ஒரு நாளைக்கு ஒரு பழமும் சாப்பிட அளித்தாலே போதுமானது. மேலும், மாலையில் காய்கறி அல்லது மாமிச சூப்பும், அவ்வப்போது நறுக்கிய காய்கறிகளையும் பழங்களையும் அளிக்கலாம்.
குழந்தைகளின் எடையை குறைக்க, detox diet சரியான வழியல்ல. குழந்தைகளை ஓடியாடி விளையாட அனுமதிக்கவும். மேலும் ஏதேனும் ஒரு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வைப்பது மிகவும் நல்லது. பெரும்பாலும் பழங்கள், காய்கறிகள் என்றாலே முகம் சுளிக்கும் மழலைகளுக்கு சிறு வயதிலேயே diet என்ற பெயரில் உணவுகளை ஒருவித கட்டாயத்துடன் சாப்பிட அளித்து, அவர்கள் உணவினையே முற்றிலும் வெறுத்து ஒதுக்கும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்.., பெற்றோர்களே!
குழந்தைகள் அணைத்து வகையான உணவுகளையும் உண்ணுமாறு செய்யுங்கள்; அதனால், அவர்கள் எடை கூடினாலும், விளையாட்டு மற்றும் இதர செயல்பாடுகள் மூலம் உடல் எடை தானாகக் குறையும். மேலும் குழந்தைகள் வளர வளர அவர்களின் உயரத்திலும், உடல் எடையிலும் பல மாற்றங்கள் நிகழும்..!