லைஃப்ஸ்டைல்
குழந்தைக்கு ஜுரம் வரும் போது ஸ்வெட்டர் போடலாமா?

குழந்தைக்கு ஜுரம் வரும் போது ஸ்வெட்டர் போடலாமா?

Published On 2019-10-18 06:36 GMT   |   Update On 2019-10-18 06:36 GMT
குழந்தைக்கு ஜுரம் இருக்கும் போது கண்டிப்பாக ஸ்வட்டர் போடக்கூடாது. ஏன் என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
ஜுரம் என்பது ஒரு அறிகுறி மட்டுமே, அதுவே வியாதி அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் குழந்தைகளுக்கு ஜுரம் வந்தால் சோர்வடைந்து எதுவும் சாப்பிடாமல், குடிக்காமல் இருப்பார்கள். இது உடலில் உள்ள நீர்சத்தை குறைத்துவிடும். இது மேலும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.

ஜுரம் வந்தால் முதலில் செய்யவேண்டியவை:

அதிகமான திரவ உணவினை கொடுத்துகொண்டே இருக்க வேண்டும். காய்கறி சூப், ஐஸ் போடாத பழசாறு பேன்றவை. காற்றோட்டம் உள்ள பஞ்சினால் ஆனா உடையை மட்டுமே போடவேண்டும். முடிந்தால் டயபரை கூட கழட்டிவிடுவது நல்லது.

ஸ்வட்டர் கண்டிப்பாக போடக்கூடாது. ஏனெனில் இது உடல் சூட்டை தக்கவைத்து ஜூரத்தை இன்னும் அதிகரிக்க செய்யும். எனவே கண்டிப்பாக ஸ்வட்டர் போட கூடாது. இதனால் சில குழந்தைகளுக்கு சுர வலிப்பு எனப்படும் febrile fits வர வாய்ப்பு உண்டு. எடை குறைவான குழந்தைகளுக்கு உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் இருக்க ஸ்வட்டர் பயன்படுத்தலாம்.

மேலும் பயணம் செய்யும்போதும், குளிர்பிரதேசங்களுக்கு செல்லும்போதும் ஸ்வட்டர் பயன்படுத்தலாம்.
Tags:    

Similar News