லைஃப்ஸ்டைல்
குழந்தைகள் பொய் பேசுவதை எப்படி தெரிந்து கொள்வது?

குழந்தைகள் பொய் பேசுவதை எப்படி தெரிந்து கொள்வது?

Published On 2019-08-21 05:19 GMT   |   Update On 2019-08-21 05:19 GMT
பெற்றோர்கள், குறிப்பாக தாய்கள், தங்கள் குழந்தைகள் பொய் சொல்கிறார்களா என்பதை கவனித்து வர வேண்டும். பொய் சொல்வது தெரிந்தால் ஆரம்பக்காலத்திலே தீய சுலபமாக மாற்றி விடும் வாய்ப்புள்ளது.
பொய் சொல்வது என்பது குழந்தைகள் செய்யும் இயல்பான விஷயங்களில் ஒன்றாகும். நாம் மெனக்கெட்டு கற்றுத்தராவிட்டாலும் காலப்போக்கில் அதனை அவர்களாகவே, தங்களுடன் இருக்கும் நண்பர்கள் அல்லது சூழ்நிலையால் அதனை கற்றுக் கொள்வார்கள்.

பெற்றோர்கள், குறிப்பாக தாய்கள், தங்கள் குழந்தைகள் பொய் சொல்கிறார்களா என்பதை கவனித்து வர வேண்டும். பொய் சொல்வது தெரிந்தால் ஆரம்பக்காலத்திலே தீய சுலபமாக மாற்றி விடும் வாய்ப்புள்ளது.

உங்கள் குழந்தை பொய் பேசுகிறார்களா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் மிகவும் நெருக்கமாக பழக வேண்டும். இதன் மூலம் அவர்களது உரையாடலில் புரிந்து கொள்ளலாம். சில செயல்களும் உடல் மொழியும் அவர்கள் பொய் கூறுகிறார்களா என்பதை தெரிவிக்கும்.

உங்கள் குழந்தை பொய் சொன்னால், கண் தொடர்பை அவர்கள் தவிர்ப்பார்கள். உங்கள் கண்களைப் பார்த்து பேசமாட்டார்கள். இது மட்டுமே அறிகுறியன்று. அவர்கள் வளர வளர இதனை சமாளிக்க புது உத்திகள் கற்றுக் கொள்வார்கள். பிறகென்ன பயமின்றி உங்கள் கண்களை பார்த்தே அவர்கள் பொய் கூற ஆரம்பித்து விடுவார்கள்.

சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என அர்த்தமாகும். அவர்கள் மேல் தாராளமாக சந்தேகிக்கலாம். அதே போல் முகத்தை அறித்து கொள்ளுதல், மூக்கு அல்லது தலையை தொடுதல் அவர்கள் பொய் சொல்கிறார்கள், மனப்பதட்டத்தை தணிக்கும் அறிகுறிகளாகும்.
Tags:    

Similar News