லைஃப்ஸ்டைல்

குழந்தைகளை எப்படி படுக்க வைக்க வேண்டும்?

Published On 2018-09-18 04:52 GMT   |   Update On 2018-09-18 04:52 GMT
தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.
* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே படுக்க வைப்பது பாதுகாப்பானது.

* ஒரு வயது வரை கூட தொட்டிலில் படுக்க வைக்கலாம்.

* குழந்தையின் முதுகு படுக்கையில் இருக்கும்படியாக மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும். இது சிறந்த முறை எனலாம்.

* கட்டிலில் படுக்க வைக்கும்போது, சமதளமான விரிப்பில் விரித்து, குறைந்த ஆடைகளுடன் கயிறு, நாடா, லேஸ் இதுபோல எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

* தலையில் தொப்பி போடாமல் குழந்தையை தூங்க வைக்க வேண்டும்.

* ஏனென்றால் இதெல்லாம் மூச்சடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

* குழந்தை குப்புறப் படுக்காமல் மல்லாக்கத் தூங்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

* மது அருந்தியவர்கள், புகை பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் அருகில் படுக்க கூடாது.

* குண்டாக இருப்பவர்கள் யாரும் குழந்தைக்கு அருகே படுக்க கூடாது.

* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அருகில் தலையணை, கனமான போர்வை, கம்பளி, பெரிய வகையான பஞ்சு பொம்மைகள் ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது.   



எந்த வயது வரை குழந்தைகளை அருகில் படுக்க வைக்கலாம்?

* 1-5 வயது வரை மட்டுமே குழந்தைகளுடன் பெற்றோர் படுக்கையில் ஒன்றாகத் தூங்கலாம்.

* அதற்கு பின் பெண் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது நல்லது. அல்லது அதே அறையில் வேறு இடத்தில் தூங்க வைக்கலாம்.

* ஆண் குழந்தைகளை தந்தையுடன் உறங்க செய்வது நல்லது.

* நீண்ட நாட்கள் பெற்றோரின் இடையில் தூங்கும் குழந்தைகள், பெற்றோரை சார்ந்தே வாழவும் முடிவெடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழக்கிறார்கள்.

* பெற்றோருடன் தூங்கும் குழந்தைகள், பெற்றோர் தங்களுக்குள் பாலியல் ரீதியாக நெருங்குவதைப் பார்க்கும் குழந்தைகள், பாலியல் ரீதியான அசைவுகளை உணரும் குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கின்றனர். தூக்கத்தைத் தொலைக்கின்றனர்.

* அதுபோல தனியாக உறங்கும் குழந்தைகள் சற்று முரட்டுத்தனம், அதிக சுகந்திரம் படைத்தவர்களாக வளர்கிறார்கள். இவர்களுக்கு மூளை வளர்ச்சி, புரிந்து கொள்ளும் திறனும் குறைகிறது.

Tags:    

Similar News