லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு அடிக்கடி வெந்நீர் கொடுங்கள்

Published On 2016-09-26 03:11 GMT   |   Update On 2016-09-26 03:11 GMT
குழந்தைகளுக்கு அடிக்கடி வெந்நீர் கொடுப்பது அவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. அதை பற்றி கீழே பார்க்கலாம்.
இன்றைய கால இளம் தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளை வளர்ப்பது என்பதே ஒரு சவாலான காரியமாக உள்ளது. எதற்காக அழுகிறார்கள் என்பதே தெரியாமல் குழம்பிப் போய் நிற்பார்கள். இவர்களுக்கான உபயோகக் குறிப்புகளை கீழே பார்க்கலாம்.

* குழந்தையின் உடல்வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று தேன், காலையில் எழுந்தவுடன் ஒரு சொட்டு தேனை குழந்தையின் நாக்கில் தடவ வேண்டும்.

* தினமும் இரவில் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள்.

* பின்னர் வெற்றிலையில் எண்ணெய் தடவி விளக்கில் காட்டி குழந்தையின் தொப்புள் மேல் வைக்க வேண்டும், இவ்வாறு செய்தால் வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.

* குழந்தை மலச்சிக்கலால் கஷ்டப்படும் போது வெந்நீர் கொடுக்கலாம் அல்லது 4 அல்லது 5 உலர்ந்த திராட்சையை வெந்நீரில் ஊறப்போட்டு அந்த நீரை கொடுத்தாலும் சுலபமாக இருக்கும்.

* சளி பிடித்திருந்தால் சூடான தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை போட்டு, அதை நெஞ்சில் தடவி வந்தாலும் சளி சரியாகும்.

* பொதுவாக குழந்தைகளுக்கு தினமும் காலையும், மாலையும் வெந்நீர் கொடுப்பது உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

Similar News