லைஃப்ஸ்டைல்

குழந்தைக்கு ஒரு வயதிற்குள் பசும்பால் கொடுக்கலாமா?

Published On 2016-09-24 05:27 GMT   |   Update On 2016-09-24 05:27 GMT
குழந்தைக்கு ஒரு வயதிற்குள் பசும்பால் கொடுக்கலாமா? என்ற சந்தேகம் அனைவரும் உள்ளது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அனேக தாய்மார்களுக்கு இருக்கும் சந்தேகம் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கலாமா வேண்டாமா என்பது தான். எந்த மாதத்தில் இருந்து கொடுக்க வேண்டும்? செரிமானம் ஆகுமா? என்றெல்லாம் மனதில் கேள்வி எழும்.

பொதுவாக மருத்துவர்கள் ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், ஒரு சொட்டு தண்ணீர்கூட தரக்கூடாது என கண்டிப்புடன் சொல்வார்கள்.

ஆறு மாதம் முடிவடைந்த பின்னர் திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். அத்துடன் சிறிதளவு பசும்பாலும் கொடுக்கலாம், பசும்பாலில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.

புரோட்டீன், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், கால்சியம் இருப்பதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. வாழ்க்கையின் பிற்காலங்களில், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்துகளை இது குறைக்கிறது.

எனினும் மருத்துவரின் ஆலோசனையின்படி அளவாக கொடுக்கவும், அளவுக்கு அதிகமாக கொடுக்கும் பட்சத்தில் அதுவே ரத்தசோகை வரவும் காரணமாகும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

Similar News