லைஃப்ஸ்டைல்

காலை உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகள்

Published On 2016-07-26 05:12 GMT   |   Update On 2016-07-26 05:12 GMT
காலை உணவினை சாப்பிடாத குழந்தைகளுக்கு பேச்சுத் திறன், செயல்பாட்டு திறன் போன்றவை பாதிக்கப்படுவது சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலை உணவினை சாப்பிடாத குழந்தைகளுக்கு பேச்சுத் திறன், செயல்பாட்டு திறன் போன்றவை பாதிக்கப்படுவது சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் காலை உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கும், தொடர்ந்து காலை உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு சீனாவைச் சேர்ந்த 1,269 குழந்தைகளிடம் ஆறு ஆண்டுகளாக நடத்தப்பட்டது. ஆய்வில் காலை உணவு சாப்பிடாத குழந்தைகளின் பேச்சு திறன் மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேசமயம், அடிக்கடி அல்லது தொடர்ந்து காலை உணவு சாப்பிடும் குழந்தைகள் நல்ல அறிவு திறன் கொண்டவர்களாக இருப்பதும் தெரியவந்தது.

குழந்தைகளின் அறிவு திறன் அதிகரிக்க போதுமான உணவு அவசியம். காலை உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கு உடனடி மற்றும் நீடித்த பாதிப்புகள் ஏற்படும். காலை உணவை தவிர்க்காமல் உண்ணும் குழந்தைகள் வளர்ந்த பின்பு சமூகத்தை எதிர்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களையும் தடுக்கும் வலிமையையும் பெறுகின்றனர்.

எனவே, குழந்தையின் காலை உணவில் பெற்றோர் அக்கறை செலுத்துவதுடன் பள்ளிகளும் போதிய நேரத்துக்கு பின்பு வகுப்புகளை தொடங்குதல் அல்லது பள்ளியிலேயே குழந்தைகளுக்கு உணவு அளித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Similar News