பெண்கள் உலகம்

ஆண் எப்ப‍டி இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவார்கள்

Published On 2016-07-02 10:13 IST   |   Update On 2016-07-02 10:13:00 IST
ஆண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற பெண்களின் விருப்பங்கள் பல வகையாக உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ‘ fair complexion’ உள்ள பெண்கள் கூட எதிர்பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து. ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் ‘மீசை’க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ‘மீசை’ ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ‘ தாடி’ பிடிப்பதில்லை.

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ‘ ட்ரெஸ்ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர் ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ் – டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம். முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது.

அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும். (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டார்கள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, தவிர ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

Similar News