லைஃப்ஸ்டைல்

சுவையான கோபி 65 செய்வது எப்படி

Published On 2016-05-21 05:35 GMT   |   Update On 2016-05-21 05:36 GMT
சுவையான கோபி 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை மாலை நேரம் சுக்கு காபியுடன் சுவைக்க அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :

பெரிய காலிஃப்ளவர் - 1
சோளமாவு - 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
சமையல் சோடா - 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக வெட்டி கொதிக்கும் வெந்நீரில் சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் போட்டு எடுக்கவும். இதனால் அதில் கண்ணிற்கு தெரியாத பூச்சிகள் இருந்தாலும் இறந்துவிடும்.

* ஒரு அகலமான பாத்திரத்தில் காலிஃப்ளவரை கொட்டி அதன் மீது சோளமாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், கரம் மசாலாதூள், சமையல் சோடா, உப்பு, இஞ்சி பூண்டு விழுது மைதா மாவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தூவி கலக்கவும். அதிக உலர்வாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து பின்னர் அரை மணி நேரம் ஊறவிடவும்.

* வாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும் அதில் ஊறவைத்த காலிஃப்ளவரை போட்டு பொரித்தெடுக்கவும்.

* மொறு மொறுப்பான கோபி 65 தயார். கொத்துமல்லி தூவி பரிமாறவும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News