லைஃப்ஸ்டைல்

சாமை பெசரட் செய்வது எப்படி

Published On 2016-05-02 02:35 GMT   |   Update On 2016-05-02 03:10 GMT
சிறு தானியங்களில் ஆரோக்கியம் இருக்குமே தவிர சுவை இருக்காது என்பது பலரது நினைப்பு. ஆனால் அது தவறாக கருத்து. இந்த சாமை பெசரட் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :

பச்சைப் பயறு - 1 கப்
சாமை - அரை கப்
பச்சை மிளகாய் - 4
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் -  தேவையான அளவு

செய்முறை :

* பச்சைப் பயறையும் சாமைப் அரிசியையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

* அவற்றுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்.

* தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகத் தூள், கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்க்கவும்.

* இந்த மாவைச் சூடான தோசைக் கல்லில் ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டுத் திருப்பிப் போடவும். இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

* மொறுமொறுப்புடன் இருக்கும் இந்த பெசரட்டுடன் தக்காளி சட்னி அல்லது இஞ்சி சட்னி சேர்த்துப் பரிமாறலாம்.

- தங்களுடைய கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News