கால்பந்து

உலக கால்பந்து இறுதிபோட்டி: டி.வி. பார்வையாளர்களை கடந்து டிஜிட்டலில் 11 கோடி பேர் பார்த்து சாதனை

Update: 2022-12-20 05:01 GMT
  • முதல் முறையாக டி.வி. பார்வையாளர்களை கடந்து இந்தியாவில் புதிய சாதனை
  • இந்தியாவில் முதல் முறையாக டெலிவிஷனில் பார்த்தவர்களை விட டிஜிட்டல் மூலம் அதிக அளவில் பார்த்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எங்கு பார்த்தாலும் அதைப் பற்றிய பேச்சாகவே இருந்தது

கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த இறுதிப் போட்டியை உலகம் முழுவதும் மொத்தம் சுமார் 150 கோடி பேர் வரை பார்த்து இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 டெலிவிஷன் சேனலிலும், ஜியோ சினிமா தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இறுதிப் போட்டியை இந்தியாவில் 11 கோடி பேர் டிஜிட்டல் வழியில் பார்த்துள்ளனர். இது புதிய சாதனையாகும்.

இந்தியாவில் முதல் முறையாக டெலிவிஷனில் பார்த்தவர்களை விட டிஜிட்டல் மூலம் அதிக அளவில் பார்த்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஜியோ சினிமா தளத்தில் இந்த ஆட்டத்தை 3.2 கோடி கண்டு களித்துள்ளனர்.

ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மற்றும் ஜியோ சினிமா என இரண்டிலும் சேர்த்து 4 கோடி நிமிடங்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பார்க்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News