கால்பந்து

ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரிக்கு விராட் கோலி வாழ்த்து

Published On 2024-05-16 09:46 GMT   |   Update On 2024-05-16 09:46 GMT
  • இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.
  • சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு கடந்த 20 ஆண்டுகளாக அவர் பங்களிப்பு அளித்து வந்துள்ளார்.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.

இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.

ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுகிறார்.

கால்பந்து வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனக்கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவின் கீழ் 'சகோதரரே உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்' என்று கிரிக்கெட் வீரர் விராட் கோலி கமெண்ட் செய்துள்ளார்.

"உங்களின் கால்பந்து வாழ்க்கை அற்புதமானது. சந்தோசமாக ஓய்வை கொண்டாடுங்கள் லெஜெண்ட்" என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் சுனில் சேத்ரியின் இந்த வீடியோவை பிசிசிஐ மற்றும் பல்வேறு ஐபிஎல் அணிகள் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News