வழிபாடு

நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவிலில் புஷ்ப யாகம் அடுத்த மாதம் 8-ந்தேதி நடக்கிறது

Update: 2023-05-30 07:03 GMT
  • 7-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.
  • 8-ந்தேதி ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவிலில் சமீபத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. அதில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது.

அதையொட்டி 7-ந்தேதி அங்குரார்ப்பணம், 8-ந்தேதி காலை உற்சவர்களுக்கும், மூலவர்களுக்கும் ஸ்நாபன திருமஞ்சனம், மாலை புஷ்ப யாகம், அதன் பிறகு மாலை வீதி உற்சவம் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News