வழிபாடு

வயலூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 4-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-04-02 06:57 GMT   |   Update On 2023-04-02 06:57 GMT
  • பங்குனி திருவிழா 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
  • சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

திருச்சியை அடுத்த வயலூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தென் தமிழகத்தில் புகழ்வாய்ந்த முருகன் தலங்களில் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக விளங்கி வருகின்றது. அருணகிரிநாதருக்கு காட்சி தந்து, திருப்புகழ் பாடல் அருளிய தலமாகும். கிருபானந்த வாரியார் சுவாமிகள் தம் வாழ்நாள் எல்லாம் போற்றி வணங்கிய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 8-ந்தேதி வரை 5 நாட்கள் பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இந்த கோவிலில் பாலாலயம் நடைபெற்றுள்ளதால் சுவாமி திருவீதி உலா கோவிலின் உள்ளே நடைபெறும். அபிஷேகம் மற்றும் இதர அபிஷேகங்களும் நடைபெற உள்ளது.

வருகிற 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அன்று நடைபெறும் பங்குனி உத்திரப் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சிறப்பு பஸ்கள் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணிகளை சோமரசன்பேட்டை போலீசார் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் லட்சுமணன், கோவில் நிர்வாக அதிகாரி அருண் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர் செய்துவருகின்றனர்.

Tags:    

Similar News