ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.
- இன்று சுபமுகூர்த்த தினம்.
இன்று சுபமுகூர்த்த தினம். திருச்சி தாயுமானவர், திருவாதவூர் தியாகராஜர், காஞ்சீபுரம் ஏகாம்பரேசுவரர், திருபுவனம் சிவபெருமான் கோவில்களில் உற்சவம் ஆரம்பம். கழுகுமலை முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். மன்னார் குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி ரதோற்சவம். நேசநாயனார் குருபூஜை. திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு, பங்குனி-13 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி இரவு 9.01 மணி வரை பிறகு சப்தமி.
நட்சத்திரம்: ரோகிணி மாலை 6.41 மணி வரை பிறகு மிருகசீரிஷம்.
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-செலவு
மிதுனம்-பரிசு
கடகம்-வரவு
சிம்மம்-உற்சாகம்
கன்னி-கீர்த்தி
துலாம்- நட்பு
விருச்சிகம்-உறவு
தனுசு- ஆனந்தம்
மகரம்-இன்பம்
கும்பம்-உற்சாகம்
மீனம்-பக்தி