ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
- இன்று சுபமுகூர்த்த நாள்.
இன்று சுபமுகூர்த்த நாள். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. காஞ்சீபுரம் ஸ்ரீ வரத ராஜப் பெருமாள் காலை கண்ணன் திருகோலம், யானை வாகனத்தில் சூர்ணாபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுர சுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தனகிரீசுவரர் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம். திருஞான சம்பந்த நாயனார், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், முருக நாயனார் குரு பூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-22 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை காலை 7.54 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: மூலம் பின்னிரவு 3.27 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிந்தனை
ரிஷபம்-வரவு
மிதுனம்-நற்செயல்
கடகம்-தாமதம்
சிம்மம்-செலவு
கன்னி-நேர்மை
துலாம்- வெற்றி
விருச்சிகம்-நன்மை
தனுசு- மேன்மை
மகரம்-ஆதரவு
கும்பம்-ஆக்கம்
மீனம்-தெளிவு
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional