வழிபாடு

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம் இன்று நடக்கிறது

Published On 2023-04-26 04:37 GMT   |   Update On 2023-04-26 04:37 GMT
  • இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை யாகம் நடைபெறும்.
  • சுவாமி, தாயாருக்கு பல்வேறு வகையான மலர்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இன்று (புதன்கிழமை) புஷ்ப யாகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை அங்குரார்ப்பணம், ஆச்சார்ய ருத்விக்வாரணம் நடந்தது. மாலை 6 மணிக்கு சேனாதிபதி உற்சவம், 7 மணிக்கு மேதினி பூஜை, மிருட்சம்கிரஹணம் நடைபெற்றது.

இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு திருமஞ்சனம், மாலை 4 மணி முதல் 6 மணி வரை யாகம் நடைபெறும். இதையொட்டி சுவாமி, தாயாருக்கு பல்வேறு வகையான மலர்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு கோதண்டராமசுவாமி, சீதா லட்சுமணருடன் கோவில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

கோதண்டரார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற்றது. அப்போது நித்யகைங்கர்யங்களில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் அவர்களை அறியாமல் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதற்கு பரிகாரமாக இந்த புஷ்பயாகம் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News