வழிபாடு

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிப்ரவரி 11-ந்தேதி தொடக்கம்

Published On 2023-01-25 14:30 IST   |   Update On 2023-01-25 14:30:00 IST
  • இந்த விழா பிப்ரவரி 11-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது.
  • 19-ந்தேதி கல்யாண உற்சவம் நடக்கிறது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது. முன்னதாக 10-ந்தேதி மாலை புற்றுமண் எடுத்தும், முளைப்பாரி விதைத்தும் அங்குரார்பணம் நடக்கிறது.

பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் 11-ந்தேதி மீன லக்னத்தில் நடக்கிறது. மகா சிவராத்திரியையொட்டி 18-ந்தேதி நந்தி வாகன வீதிஉலா நடக்கிறது. 19-ந்தேதி கல்யாண உற்சவம், 20-ந்தேதி திரிசூல ஸ்நானம், கொடியிறக்கம் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News