வழிபாடு

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 26-ந்தேதி கொடியேற்றம்

Published On 2023-05-20 12:02 IST   |   Update On 2023-05-20 12:02:00 IST
  • பிரம்மோற்சவ விழா 26-ந்தேதி தொடங்கி ஜூன் 3-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
  • ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

அதையொட்டி 25-ந்தேதி மாலை அங்குரார்பணம், 26-ந்தேதி கொடியேற்றம், 30-ந்தேதி கருட வாகன வீதிஉலா, ஜூன் 2-ந்தேதி தேரோட்டம், 3-ந்தேதி சக்கர ஸ்நானம் ஆகியவை நடக்கிறது.

பிரம்மோற்சவ விழா நாட்களில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பக்தி கலாசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

Tags:    

Similar News