வழிபாடு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நாளை காலை தொடங்குகிறது

Published On 2022-08-10 08:08 GMT   |   Update On 2022-08-10 08:08 GMT
  • அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது சிறப்பானது.
  • திருவண்ணாமலை மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவடைகிறது.

பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News