வழிபாடு

தேர் பவனி நடந்தபோது எடுத்த படம்.

கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய தேர் பவனி: திரளானவர்கள் பங்கேற்பு

Published On 2023-07-16 04:32 GMT   |   Update On 2023-07-16 04:32 GMT
  • இன்று மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
  • இரவு 7.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மறையுரை, மாலையில் திருயாத்திரை திருப்பலி, நற்கருணை ஆசீர், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

9-ம் திருநாளான நேற்று காலையில் கூத்தன்குழி தியான இல்ல அதிபர் வியான்னி தலைமையில் திருப்பலி நடந்தது. மாலையில் சி.சவேரியார்புரம் பங்குத்தந்தை ரெமிஜியுஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. சோமநாதபேரி பங்குத்தந்தை ஜெகதீஷ் மறையுரையாற்றினார்.

இரவில் புனித அன்னம்மாளின் தேர் பவனி நடந்தது. ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேரானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. வழிநெடுகிலும் திரளான கிறிஸ்தவர்கள் புனித அன்னம்மாளை வழிபட்டனர்.

10-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு கோட்டார் அசிசி அச்சக மேலாளர் ஜார்ஜ் தலைமையில் முதல் திருப்பலி நடக்கிறது. காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ஆல்பர்ட் ஜான்சன் மறையுரையாற்றுகிறார்.

மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கூடங்குளம் பங்குத்தந்தை அந்தோணி ஜெபஸ்டின் ரூபன் தலைமையில், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News