வழிபாடு

சீனிவாசமங்காபுரம் கோவில் பிரம்மோற்சவ விழா 11-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-02-03 04:31 GMT   |   Update On 2023-02-03 04:31 GMT
  • 15-ந்தேதி கருடசேவை நடக்கிறது.
  • 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி 10-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் வெளியீட்டு விழா திருப்பதியில் தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தில் உள்ள இணை அதிகாரியின் அறையில் நடந்தது. இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று சுவரொட்டிகளை வெளியிட்டார்.

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை பெரிய அளவில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 11-ந்தேதி கொடியேற்றம், 15-ந்தேதி கருடசேவை, 16-ந்தேதி தங்கத் தேர், 18-ந்தேதி தேரோட்டம், 19-ந்தேதி சக்கர ஸ்நானம் ஆகியவைகள் நடக்கிறது.

அப்போது தேவஸ்தான சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, கண்காணிப்பாளர் செங்கல்ராயலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News