வழிபாடு

திருக்கல்யாண உற்சவம் நடந்தபோது எடுத்தபடம்.

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் பிரம்மோற்சவம் 9-வது நாள்:சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம்

Published On 2023-02-22 03:51 GMT   |   Update On 2023-02-22 03:51 GMT
  • இன்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கிரிவலம் செல்கிறார்கள்.
  • இரவு 9 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வீதிஉலா வருகின்றனர்.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான நேற்று அதிகாலை 3 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் சூட்சமமாக வந்து பங்கேற்று புதுமணத் தம்பதியர் மீது அட்சதை தூவி ஆசிர்வதித்ததாகப் பக்தர்களின் நம்பிக்ைக.

அதைத்தொடர்ந்து காலை 11 மணியளவில் புதுமண தம்பதியர் அலங்காரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிைக தாயாரும் ருத்ராட்ச அம்பாரி வாகனங்களில் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து கோவில் வரை ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் இரவு 7 மணியளவில் நடராஜர் (சபாபதி) திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் பங்ேகற்று சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழாவின் 10-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் ஊர்வலமாக புறப்பட்டு கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்கிறார்கள். கிரிவலம் முடிந்ததும் இரவு 9 மணியளவில் குதிரை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

Tags:    

Similar News