வழிபாடு

சட்டநாதர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்: குடமுழுக்கு மே 24-ந்தேதி நடக்கிறது

Published On 2023-03-18 06:08 GMT   |   Update On 2023-03-18 06:08 GMT
  • இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது.
  • நவகிரக சன்னதி அருகே பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

சீர்காழியில் சட்டநாதர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புமிக்க இக்கோவிலில், 32 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது. அதன் பிறகு தற்போது அடுத்த மாதம் (மே) மாதம் 24-ந்தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று குடமுழுக்கிற்கான யாகசாலை பூஜை மற்றும் பந்தக்கால் அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.

இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கோவில் கொடிமரம் அருகே பந்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேலதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டது. பின்னர் நவகிரக சன்னதி அருகே பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேல கோபுரவாசல் அருகே யாகசாலை அமைக்க பந்தக்கால் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடப்பட்டது.

இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி, கோவில் கணக்கர் செந்தில், நகர்மன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, ஜெயந்திபாபு, நாடார் உறவின்முறை சங்க நிர்வாகி பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவில் சார்பில் தருமபுரம் ஆதீனத்திற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News