வழிபாடு

வால்பாறையில் தூய இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி

Published On 2023-01-22 05:46 GMT   |   Update On 2023-01-22 05:46 GMT
  • இன்று குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
  • ஆலயத்தை சுற்றி அம்பு நேர்ச்சையும் நடைபெறுகிறது.

வால்பாறை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தின் தேர் பவனி விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் திவ்ய நற்கருணை ஆசீர் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு வாழைத்தோட்டம் புனித செபஸ்தியார் சிற்றாலயத்தில் சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி, ஜெப வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து பங்கு மக்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் அம்பு நேர்ச்சை பவனி நடந்தது.

இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு ஆலயத்தில் பங்கு குருக்கள் ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் தலைமையில் முடீஸ் புனித அந்தோணியார் ஆலய பங்கு குரு மரிய அந்தோணிசாமி, சோலையாறு நகர் புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு ஜார்ஜ் சகாயராஜ், அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலய பங்கு குரு ஆனந்த குமார் ஆகியோர் முன்னிலையில் கூட்டு பாடல் திருப்பலி நடத்தப்பட்டது.

பின்னர் 6.30 மணிக்கு தூய இருதய ஆண்டவர், புனித செபஸ்தியார், வேளாங்கண்ணி மாதா சொரூபங்கள் தாங்கிய தேர்பவனியானது வால்பாறை பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட்டு பாடல் திருப்பலியும், 15 குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் ஆலயத்தை சுற்றி அம்பு நேர்ச்சையும் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு நன்றியின் நற்கருணை ஆசீர் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News