வழிபாடு

விஷூ கனிகாணும் நிகழ்ச்சியையொட்டி கலந்து கொண்ட பக்தர்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று விஷூ கனிகாணும் நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2023-04-15 06:10 GMT   |   Update On 2023-04-15 06:10 GMT
  • பூஜையில் வைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
  • கோவில் நடை 19-ந்தேதி அடைக்கப்படும்.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடந்தது.

சித்திரை முதல் நாளில் இறைவன் முன்பு காய்,கனிகளை படைத்து சாமி தரிசனம் செய்தால் அந்த ஆண்டு இனிமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அந்த வகையில் கேரளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷூ கனிகாணும் நிகழ்ச்சிக்காக இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. கோவிலில் சாமி முன்பு பல வகையான காய், கனிகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டி ருந்தன.

தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வழிபாடுகள் முடிந்த பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

அதனை வாங்கவும், ஐயப்பனை தரிசிக்கவும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை சென்று விஷூ கனிகாணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விஷூ கனிகாணும் நிகழ்ச்சிக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.

Tags:    

Similar News