வழிபாடு

சபரிமலை பெயர் வந்தது எப்படி?

Published On 2022-11-21 08:11 GMT   |   Update On 2022-11-21 08:11 GMT
  • சபரி பெற்றிருந்த சாபத்தை ஐயப்பன் நீக்கினார்.
  • ஐயப்பன் மகிஷியை வதம் செய்துவிட்டு பந்தள நாடு திரும்பினார்.

இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க ஐயப்பன் மகிஷியை வதம் செய்துவிட்டு பந்தள நாடு திரும்பினார். அப்போது வழியில் உள்ள மலையில் சபரி என்கிற வித்யாதரப் பெண் தவம் செய்து கொண்டு இருந்தாள்.

மணிகண்டனை உபசரித்த அந்த சபரி பெற்றிருந்த சாபத்தை ஐயப்பன் நீக்கினார். தன் சாபம் நீங்கிய அந்த மலை தன் பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என்று ஐய்யப்பனிடம் வேண்டினாள். அதன் காரணமாக சபரிமலை என்ற பெயர் ஏற்பட்டது.

பிரம்மசாரி

சபரிமலையில் யோக பட்டம் திருக்கால்களில் விளங்கக் காட்சியளிக்கின்ற ஸ்ரீமணிகண்டனை அனுக் ரஹ மூர்த்தி என்று சொல்கிறார்கள்.

இவர் நைஷ்டிக பிரம்மசரியம் என்ற கடும் தவத்தில் எப்போதும் நிலை பெற்றிருப்பதனால்தான் பருவ வயதுடைய பெண்களை சந்நிதானத்தில் அனுமதிப்பதில்லை.

Tags:    

Similar News