வழிபாடு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

Published On 2022-11-16 11:41 IST   |   Update On 2022-11-16 11:53:00 IST
  • டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது.
  • 2023 ஜனவரி 14-ந்தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும்.

மண்டல-மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரிகண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், புதிய மேல்சாந்திகள் பதவியேற்று கொள்கிறார்கள். நாளை (வியாழக்கிழமை) அதிகாலை முதல்வழக்கமான பூஜைகள் நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில்மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரிகுமார் நம்பூதிரி ஆகியோர் பதவி ஏற்பு நிகழ்ச்சி தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் சன்னிதானத்தில்நடைபெறும். அதைத்தொடர்ந்து 18-ம்படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் சாமி தரிசனத்திற்கு பின்னர்இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை (வியாழக்கிழமை) அதிகாலை முதல், புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார். அன்று முதல் அதிகாலை 4மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி, அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும்.

இந்த நிலையில், பத்தனம் திட்டை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள ஐயப்ப பக்தர்களுக்கான 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு வார்டை கேரளசுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று திறந்து வைத்தார்.

Tags:    

Similar News