வழிபாடு

சாமி சிலைகள், புரவிகள் ஊர்வலமாக எடுத்து சென்ற காட்சி.

சோழவந்தான் அருகே 17 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு திருவிழா

Published On 2023-05-31 06:35 GMT   |   Update On 2023-05-31 06:35 GMT
  • சாமிசிலை, குதிரைகள் கிராமத்தின் பொது மந்தையில் வைக்கப்பட்டது.
  • பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை நடைபெறும்.

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் சுவாமி, ஊர்காவலன்சுவாமி, கொடிப்புலி கருப்புச்சாமி ஆகிய கோவில்களின் குதிரை எடுப்பு திருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. குதிரை எடுப்பு திருவிழா நேற்று மாலை வாணவேடிக்கை மேளதாளத்துடன் நடைபெற்றது. முதலில் சாமியாடிகள் அழைப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து சாமிசிலை மற்றும் குதிரை சிலைகளை நான்கு வீதி வழியாக சாமியாடிகள், பொதுமக்கள் எடுத்து வந்தனர். சாமிசிலை, குதிரைகள் கிராமத்தின் பொது மந்தையில் வைக்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் இன்று அய்யனார் கோவில், ஊர்க்காவலன் சாமி, கொடிப்புலி கருப்புசாமி ஆகிய கோவில்களுக்கு சம்பந்தப்பட்ட சாமி சிலை மற்றும் குதிரைகள் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இதைத்தொடர்ந்து அந்தந்த கோவிலில் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை நடைபெறும். இவ்விழாவில் பல்வேறு கிராமத்திலிருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலூர் அருகே உள்ளது சாத்தமங்கலம் கண்மாய்க்கரையில் ஹரிஹரபுத்திர சாத்தை அய்யனார் கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாத புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதற்காக பாரம்பரிய வழக்கப்படி பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக 73 புரவிகள் எனப்படும் மண் குதிரைகளை இ.மலம்பட்டியில் தயார் செய்யப்பட்டது. அங்கிருந்து 73 புரவிகளை பக்தர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் சுமந்து தனியாமங்கலம் அடுத்துள்ள சாத்தமங்கலம் மந்தை திடலில் வைத்தனர். பின்னர் அங்கிருந்து ஹரிஹரபுத்திர சாத்தை அய்யனார் கோவிலுக்கு புரவிகளை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து வழிபட்டனர். கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Tags:    

Similar News