வழிபாடு

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கால்கோள் நிகழ்ச்சி

Update: 2022-10-07 05:49 GMT
  • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது.
  • கோவில் யானை காந்திமதி ஆசீர்வதிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.

நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண விழா 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது.

வருகிற 22- ந்தேதி காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், 23-ந்தேதி கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் விதமாக கால்கோள் நடும்விழா நேற்று நடைபெற்றது. அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது. அதை தொடர்ந்து அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் திருக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் திருக்கால் கோவிலை சுற்றி வலம் வந்து, காந்திமதி அம்பாள் சன்னதி முன்பு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மண்டபத்தில் கால்நாட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் கோவில் யானை காந்திமதி ஆசீர்வதிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News