வழிபாடு
சங்கர நாராயணசாமி கோவிலில் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்
- சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சங்கரநாராயணர் சன்னதி முன்பு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், சைவ சித்தாந்த சபை செயலாளர் சண்முகவேல் ஆவுடையப்பன், சைவ சித்தாந்த பேரவை தலைவர் திருமலை வேலு, கோவில் ஊழியர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.