வழிபாடு

சுப்பிரமணியசாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றதைபடத்தில் காணலாம்.

மயிலாடியில் மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு ஆராட்டு

Published On 2022-11-04 11:39 IST   |   Update On 2022-11-04 11:39:00 IST
  • சுப்பிரமணியசாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் மயிலாடிக்கு பவனியாக வந்தார்.
  • படித்துறையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடி புத்தனார் கால்வாயில் நேற்று மாலையில் ஆராட்டு விழா நடந்தது. இதற்காக மருங்கூர் கோவிலில் இருந்து சுப்பிரமணியசாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் மயிலாடிக்கு பவனியாக வந்தார். பின்னர் அங்குள்ள ஆராட்டு மடம் அருகில் உள்ள படித்துறையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புத்தனார் கால்வாயில் சுப்பிரமணியசாமிக்கு ஆராட்டு விழா நடந்தது.

விழாவில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமார், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெசிம், மயிலாடி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி பாபு, மருங்கூர் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன், மயிலாடி ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்பிரமணியம், பொதுச் செயலாளர் நாகராஜன், பொருளாளர் சுடலையாண்டி, துணைத் தலைவர் ராஜு, செயற்குழு உறுப்பினர் சுதாகர், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பெருமாள், மயிலாடி பேரூராட்சி துணைத் தலைவர் சாய்ராம், பேரூர் பா.ஜனதா தலைவர் கவுன்சிலர் பாபு, மருங்கூர் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் சீனிவாசன், மயிலாடி பேரூர் அ.தி.மு.க. செயலாளர் மனோகரன், பேரூர் மாணவரணி செயலாளர் மணிகண்டன் அ.தி.மு.க. பிரமுகர் செல்லம் பிள்ளை, தொழில் அதிபர் முருகேசன், காங்கிரஸ் பிரமுகர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி, அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸி மேனகா ஆகியோர் கண்காணிப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆராட்டு விழா முடிந்ததும் மயிலாடியில் உள்ள முக்கிய வீதிகளில் சுப்பிரமணியசாமி வலம் வந்த பின்பு மீண்டும் வெள்ளிக் குதிரை வாகனத்தில் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News