வழிபாடு

வடவேடம்பட்டியில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2022-10-21 07:58 GMT   |   Update On 2022-10-21 07:58 GMT
  • பக்தர்கள் தேரில் எழுந்தருளியஅம்மனை பயபக்தியுடன் வணங்கி வழிபட்டனர்.
  • இன்று மஞ்சள் நீர் தெளித்தலுடன் விழா நிறைவுபெறுகிறது.

சுல்தான்பேட்டை ஒன்றியம் வடவேடம்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா கடந்த 16-ந் தேதி கிராம சாந்தி, அக்கினி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் விமரிசையாக தொடங்கியது. 17-ந் தேதி காப்பு கட்டுதல், கொடி கட்டும் நிகழ்ச்சியும், 18-ந்தேதி இரவு 8 மணி அளவில் திருக்கல்யாணம் நடந்தது.

நேற்று முன்தினம் மாலை முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், முக்கிய அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தேரில் எழுந்தருளியஅம்மனை பயபக்தியுடன் வணங்கி வழிப்பட்டனர். நேற்று கம்பம் கலைத்தல், பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) மகா தரிசனம் பெருவிழா மஞ்சள் நீர் தெளித்தல் ஆகியவையுடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், தக்கார் கண்ணன் மற்றும் வடவேடம்பட்டி ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து இருந்தனர்.

Tags:    

Similar News