வழிபாடு

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது

Published On 2022-08-29 07:05 GMT   |   Update On 2022-08-29 07:05 GMT
  • 31-ந்தேதி பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.
  • வருகிற 1-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழி அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், பிரவேசபலி தீபாராதனை நடக்கிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, நவகிரகசாந்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை, மாலை 5 மணிக்கு ரக்‌ஷாபந்தனம், முதல்கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.

31-ந் தேதி காலை 9 மணிக்கு 2-ம் கால பூஜை தொடர்ந்து மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

வருகிற 1-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பூர்ணாகுதி, 4-ம் கால யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று விமானம் மற்றும் மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அஜித், ஆய்வாளர் பகவதி, செயல்அலுவலர் காந்திமதி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News