வழிபாடு

காணிப்பாக்கம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு 21-ந்தேதி நடக்கிறது

Published On 2022-07-29 08:40 GMT   |   Update On 2022-07-29 08:40 GMT
  • ஆகஸ்டு 4-ந்தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
  • ஆகஸ்டு 15-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.

சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் மோகன்ரெட்டி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ்பாபு ஆகியோர் பங்கேற்று பேசியதாவது:-

காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் தற்போது சீரமைப்புப்பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. பணிகள் 100 சதவீதம் முடிந்ததும் வருகிற ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

அன்று காலை 7 மணியில் இருந்து பகல் 11 மணி வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அன்று கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.

ஆகஸ்டு மாதம் 15-ந்தேதியில் இருந்து கோவில் விமான கோபுரத்துக்கு சிறப்புப்பூஜைகள் தொடங்கி, 21-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதனால், ஆகஸ்டு மாதம் 15-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.

ஆர்ஜித சேவைகளில் முன்பதிவு செய்த பக்தர்கள் வேறொரு தேதியில் கோவிலுக்கு வந்து குறிப்பிட்ட ஆர்ஜித சேவைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அறங்காவலர் குழு கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News