வழிபாடு

காணிப்பாக்கம் விநாயகர் கோவில் கும்பாபிஷேக யாக பூஜை நடந்தபோது எடுத்த படம்.

காணிப்பாக்கம் விநாயகர் கோவில் கும்பாபிஷேக யாக பூஜை தொடங்கியது

Published On 2022-08-17 05:54 GMT   |   Update On 2022-08-17 05:54 GMT
  • கும்பாபிஷேகம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
  • கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.

சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கும்பாபிஷேக பூஜைகள் நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று வேத ஸ்வஸ்தி, யாகசாலை பிரவேசம், கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், சத்துருவேத ஆவாஹனம், மந்திரபுஷ்பம் ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோவில் செயற்பொறியாளர் வெங்கட் நாராயணா, கோவில் துணை ஆணையாளர் கஸ்தூரி, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி, கண்காணிப்பாளர் கோதண்டபாணி மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.

21-ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொள்கிறார்.

Tags:    

Similar News