வழிபாடு

வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

கூடலழகர், கள்ளழகர் கோவிலில் பகல் பத்து, ராப்பத்து உற்சவ விழா நிறைவு

Published On 2023-01-12 06:55 GMT   |   Update On 2023-01-12 06:55 GMT
  • தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடந்தது.
  • தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு தினமும் நடந்தது.

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில்,மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும், கடந்த மாதம் 23-ந் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கியது. இதில் இரண்டு கோவில்களிலும் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு தினமும் நடந்தது.

இதில் கடந்த 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கும் விழா நடந்தது. பின்னர் 9-ந் தேதி திருவேடர் பரிவிழா நடந்தது. இதில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடந்தது. இந்த விழா 10 நாட்கள் நடந்து முடிந்தது, பின்னர் ராப்பத்து திருவிழா நேற்று 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது.

இத்துடன் இந்த மார்கழி மாத திருவிழா இரு கோவில்களிலும் நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ராப்பத்து நிகழ்ச்சி 10-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் கூடழலகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

Similar News