வழிபாடு

திருவாரூர் தியாகராஜசாமி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பாததரிசனம் செய்த பக்தர்கள்.

திருவாரூர் தியாகராஜசாமி கோவிலில் பாததரிசன நிகழ்ச்சி- பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

Published On 2025-01-13 10:10 IST   |   Update On 2025-01-13 10:10:00 IST
  • பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
  • மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர்:

வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி இன்று தியாகராஜ சாமி பாத தரிசனம் நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று இரவு தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் தியாகராஜ சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பதஞ்சலி, வியக்ரபாத முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் வலது பாதம் காட்டும் பாத தரிசனமும், தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்ட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மனுடன் வீதியுலா வந்து சபாபதி மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டது. இவ்விழாவில் கோவிலின் வெளிப்புறத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத தரிசனம் செய்து வருகின்றனர்.

பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News