திருச்சிற்றம்பலத்தில் கட்டப்பட்டு வரும் ஐயப்ப சாமி கோவிலின் எழில் மிகு தோற்றம்.
திருச்சிற்றம்பலம் ஐயப்ப சாமி கோவிலில் டிசம்பர் 4-ந்தேதி குடமுழுக்கு நடத்த முடிவு
- திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- திருச்சிற்றம்பலத்தில் கட்டப்பட்டு வரும் அய்யப்ப சாமி கோவிலின் எழில் மிகு தோற்றம்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம், துறவிக்காடு அய்யப்ப பக்தர்கள் குழுவினரால் புதிதாக அய்யப்ப சாமிக்கு கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டு, திருப்பணி குழு அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம், துறவிக்காடு சாலையின் வடபுரத்தில் அய்யப்ப சாமிக்கு கோவில் கட்டும் பணி தொடங்கியது.
அய்யப்ப சுவாமி கோவிலின் திருப்பணி வேலைகள் அனைத்தும் தற்சமயம் நிறைவு பெறும் நிலையை எட்டி உள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அய்யப்ப சுவாமிக்கும் அதன் பரிவார தெய்வங்களான கன்னி மூல கணபதி, நாகராஜா சாமி, மஞ்சமாதா, கடுத்தசாமி, கருப்பர் சாமி ஆகிய தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை குருசாமி ராமநாதன் தலைமையில் திருச்சிற்றம்பலம் துறவிக்காடு அய்யப்ப பக்தர்கள் குழுவினர் செய்து வருகிறார்கள்.