வழிபாடு
அட்சய திருதியை நாளில் செய்ய வேண்டிய சுப காரியங்கள்
- பித்ரு கடன் தீர்க்க உகந்த நாள்.
- திருதியை திதியின் அதிதேவதை கவுரி என்பதால் பார்வதி தேவியை வழிபட்டால் திருமணத் தடை அகலும்.
அட்சய திருதி நாளில் செய்ய வேண்டிய சுப காரியங்கள்:
அட்சய திருதியை நாளான இன்று புதுக்கணக்கு தொடங்க, புதிய தொழில் துவங்க வீடு கட்ட ஆரம்பிக்க, கிணறு தோண்ட, நெல் விதைக்க, கல்வி கற்க ஆரம்பித்தல், பெண் பார்க்க, திருமணம் நிச்சயித்தல் போன்றவற்றிற்கு சிறந்த நாளாகும்.
பித்ரு கடன் தீர்க்க உகந்த நாள்.
திருதியை திதியின் அதிதேவதை கவுரி என்பதால் அன்று பார்வதி தேவியை வழிபட்டால் திருமணத் தடை அகலும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.
பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து செந்தாமரை மலர்களால் வழிபட்டால் தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.