வழிபாடு

மந்தை அம்மன் கோவில் வைகாசி திருவிழா

Published On 2023-06-15 04:25 GMT   |   Update On 2023-06-15 04:25 GMT
  • திருவிளக்கு பூஜைகள், கிராமத்து தெம்மாங்கு நிகழ்ச்சி நடந்தது.
  • மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.

அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் கோட்டை கருப்பசாமி, மண்டு சோலைச்சி, அசையாமணிகட்டி, அம்மச்சி, மந்தைஅம்மன், ஆதிசிவன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வைகாசி திருவிழா நடைபெற்றது. இதில் விநாயகருக்கு கணபதி ஹோமம், தீபாராதனை நடந்தது.

மாலையில் திருவிளக்கு பூஜைகள், கிராமத்து தெம்மாங்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மறுநாள் குட்டிமேய்க்கிபட்டி சென்று மந்தை அம்மன், அய்யனார் சுவாமி குதிரை வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க சின்ன இலந்தை குளம் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அம்மனுக்கு நகை அலங்காரம் செய்து சக்தி கிடாய் வெட்டுதல், அம்மச்சி அம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் எடுத்து முளைப்பாரியுடன் ஊர்வலமாக மந்தை அம்மன் கோவிலுக்கு சாமி சென்று அடைந்தது.

விழாவில் நேர்த்திக்கடனாக மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது . அதைத்தொடர்ந்து மாலை மந்தை அம்மன் முளைப்பாரியுடன் பூஞ்சோலை சென்றடைதல் மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை சின்ன இலந்தைகுளம் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News