வழிபாடு

திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

Published On 2023-05-12 05:34 GMT   |   Update On 2023-05-12 05:34 GMT
  • நேற்று இரவு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் வசந்த பெருவிழா தொடங்கியது.
  • தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் வீதி உலா நடக்கிறது.

திருப்பத்தூர் தென்மாப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது பூமாயி அம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 89-வது பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை முதல் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் அம்பாளுக்கு பூத்தட்டு எடுத்தும், பால்குடம், கரகம், மது எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து பால், சந்தனம், பன்னீர், மஞ்சனம் உள்ளிட்ட 16 விதமான திரவியங்கள் மூலம் அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் சந்தனகாப்பு அலங்காரத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலித்தார்.

இரவு பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு கொடியேற்றத்துடன் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் வசந்த பெருவிழா தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் பல்வேறு மண்டகபடிதாரர்கள் சார்பில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. 10-ம் நாளன்று காலையில் தீர்த்தவாரி மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், மாலையில் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

Tags:    

Similar News