வழிபாடு
12 ரிஷப வாகன திருக்காட்சி வைபவம் தொடக்கம்

12 ரிஷப வாகன திருக்காட்சி வைபவம் தொடக்கம்

Published On 2022-05-31 11:11 IST   |   Update On 2022-05-31 11:11:00 IST
திருநாங்கூர் அஞ்சனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ மதங்கீஸ்வரர் சுவாமி கோவிலில் பன்னிரு சிவபெருமான் அம்பிகை திருக்கல்யாணம் மற்றும் மதங்க மகரிஷிக்கு 12 ரிஷப வாகன திருக்காட்சி வைபவம் தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மதங்காஸ்ரமம் என்னும் திருநாங்கூர் அஞ்சனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ மதங்கீஸ்வரர் சுவாமி கோவிலில் 5-ம் ஆண்டு பன்னிரு சிவபெருமான் அம்பிகை திருக்கல்யாணம் மற்றும் மதங்க மகரிஷிக்கு 12 ரிஷப வாகன திருக்காட்சி வைபவம் நேற்று தொடங்கியது. நாளை 31-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், விநாயகர் அபிஷேகம், மகா பூர்ணாஹூதி, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு செல்லியம்மன் கோவிலில் இருந்து புஷ்பங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் மகா காளி அம்மனுக்கு பூச்சொரிதல் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பிரசாதமாக வழங்கப்பட்டது.

விழாவில் இன்று காலை அனைத்து கோவில் உற்சவபேர முகூர்த்த ங்களும் மதங்கீஸ்வரர் சாமி கோவில் எழுந்தருளல் நடைபெற்றது. இதையடுத்து பஞ்சாட்சர ஜெப ஹோமத்துடன் அபிஷேக ஆராதனையும், பூர்ணாஹுதி தீபாராத னைகள் செய்து பிரசா தங்கள் வழங்க ப்பட்டது.

இரவு 7 மணிக்கு பன்னிரு சிவபெருமான் அம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீ மதங்க மகரிஷிக்கு பன்னிரு ரிஷாபாரூடராய் திருக் காட்சி அளித்தல் அதனை தொடர்ந்து திருவீதி உலா காட்சி நடைபெற உள்ளது.

நாளை அதிகாலை 4.30 மணிக்கு அனைத்து பன்னிரு முகூர்த்தங்களும் கோவில் வந்தடைந்து சமகாலத்தில் தீபாராதனைகள் நடைபெறும்.

இதைத் தவிர விழா நாட்களில் சைவ சமய ஆன்றோர்களின் சமய சொற்பொழிவுகள் திருமுறை பாராயணங்கள் கலை நிகழ்ச்சிகள் நாதஸ்வர இன்னிசைகள் நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குணசேகரன், ஆய்வாளர் மதியழகன், செயல் அலுவலர் முருகன்  மற்றும் திருநாங்கூர் லார்ட் சிவா டிரஸ்ட், பன்னிரு ரிஷப சேவை விழாக்குழு, திருநாங்கூர் அனைத்து சிவாலய கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News