வழிபாடு
ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருட சேவை

ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருட சேவை

Published On 2022-05-27 04:06 GMT   |   Update On 2022-05-27 04:06 GMT
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நவதிருப்பதி கோவில்களில் 9-வது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருக்ஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம். அதனை தொடர்ந்து 8 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது.

பின்னர் காலை 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் திருமஞ்சனம் முடிந்து, காலை 10.30மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சுவாமி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்ஸ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதில் எம்பெருமானார் ஜீயர், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கருடசேவையில் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News