வழிபாடு
திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் தேர்த்திருவிழா விடையாற்றியுடன் நிறைவு

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் தேர்த்திருவிழா விடையாற்றியுடன் நிறைவு

Published On 2022-05-18 06:45 GMT   |   Update On 2022-05-18 06:45 GMT
திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் தேர்த்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு உற்சவர்களான சுவாமி- அம்பாள், நடராஜர், விநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் தேர்த்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்கடந்த13-ந்தேதிநடைபெற்றது.

தேர் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு உற்சவர்களான சுவாமி- அம்பாள், நடராஜர், விநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இத்துடன்தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.
Tags:    

Similar News